கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர் ரூ.10 ஆயிரத்தை வக்கீல் எழுத்தர் சங்கத்துக்கு செலுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர் ரூ.10 ஆயிரத்தை வக்கீல் எழுத்தர் சங்கத்துக்கு செலுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2023-05-25 20:44 GMT


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ். கஞ்சா கடத்திய வழக்கில் இவர் மீது உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஜெகதீஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே அவருக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. அவர், ரூ.10 ஆயிரத்தை மதுரை ஐகோர்ட்டு வக்கீல் எழுத்தர் சங்கத்துக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் 4 வாரத்துக்கு உசிலம்பட்டி தாலுகா போலீசில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்