பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு- மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அவகாசம்

பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு- மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அவகாசம்

Update: 2022-11-08 19:05 GMT


மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்த தவமணிதேவி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஏற்கனவே பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.்

அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. இதுகுறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.

பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொள்கை முடிவை, தற்போதைய மக்களின் நலனுக்காக மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை செய்யலாமே? என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்