உடன்குடி:
உடன்குடி புதுமனை ஆயிஷா சித்திக்கா இஸ்லாமிய இளைஞர் பேரவையின் 22-ஆம் ஆண்டு மதரஸா விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. யாசின் கிராஅத் ஒதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், முஹம்மது ஷபிக் தலைமை தாங்கினார். மகபூப் அலி முன்னிலை வகித்தார். முகைதீன் வரவேற்று பேசினார். சலீம் இஸ்லாமிய பாடல்களை பாடினார். சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து மார்க்க உபநியாசம், பரிசுகள் வழங்குதல் ஆகியன தொடர்ந்து நடந்தது.