வேப்பூர் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதல் போக்குவரத்து பாதிப்பு
வேப்பூர் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதியது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்,
கேரள மாநிலத்தில் இருந்து அம்மாநில அரசுக்கு சொந்தமான சொகுசு பஸ் பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கண்ணூர் மாவட்டம் பி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சுதீஷ்(வயது 41) என்பவர் லேசான காயமடைந்தார். பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து காரணமாக விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.