விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும்

வேலூர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கக்கோரி மனு அளித்தனர்.

Update: 2023-08-09 18:19 GMT

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோட்டி என்ற கோவிந்தன் தலைமையில் மண்டல துணை செயலாளர் சஜின் குமார், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, தொகுதி துணை செயலாளர் அமல்ராஜ், தொண்டரணி அமைப்பாளர் வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர், திருப்பத்தூர் மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல செயலாளர், மண்டல துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் வருகிற 14-ந் தேதி வேலூர் டோல்கேட்டில் உள்ள திருமண மகாலில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வேலூரில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வேலூர் மக்கான் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து டோல்கேட் பகுதி வரை ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்