செலவுக்கு பணம் தேவைபட்டதால் காதலிக்காக சாக்கடை மூடிகளை திருடிய காதலர்கள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

செலவுக்கு பணம் தேவைபட்டதால் காதலிக்காக காதலர்கள் சாக்கடை மூடிகளை திருடி சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-06 07:05 GMT

சென்னை,

சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதில், புருஷோத்தம்மன் நகரை சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இருவரும் காதலியுடன் வெளியே செல்ல பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடியை திருடியதாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்