எரியோடு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

எரியோடு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-07-03 16:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், காரபட்டூரை சேர்ந்த இவரது உறவினர் வீரக்குமார் என்பவரின் மகள் மோனிஷா (20) என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு மோனிஷாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல்ஜோடியினர் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறினர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா காதல்ஜோடியினரிடம் விசாரணை நடத்தினார். பின்பு அவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அவர்கள் வரவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்