பேட்டை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
பேட்டை போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
பேட்டை:
நெல்லை அருகே பேட்டை வீரபாகு நகரை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் அன்பு செல்வன் (வயது 32). இவர் பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்கார பெண் மும்பையைச் சேர்ந்த பச்சம்மால் மகள் விந்தியா (23) என்பவரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விந்தியா தனது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள நெல்லையை அடுத்த மூலைக்கரைப்பட்டி இடையான்குளத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று இரவு பேட்டையில் உள்ள காதலன் அன்புச்செல்வன் வீட்டிற்கு வந்த அவர் காதலனுடன் வீட்டிலேயே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பெண் வீட்டில் எதிர்ப்பு காரணமாக இருவரும் பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவரும் மேஜர் என்பதால் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விந்தியா தனது காதலன் அன்புச் செல்வனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.