போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2023-05-01 19:00 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த சந்தியா என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே சந்தியாவுக்கு அவரது உறவினர் ஒருவரை பேசி திருமணம் செய்வதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சந்தியா, தனது காதலன் சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2 பேரும் கடந்த 28-ந் தேதி தலைமறைவானார்கள். இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர்.

இந்நநிலையில் நேற்று சரத்குமார், சந்தியா ஆகியோர் தங்களது நண்பர்கள் மூலம் நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் சாத்தான்குளம் ேபாலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து இருவீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி, காதல் திருமண ஜோடியை பிரிக்கக்கூடாது. அவர்கள் வாழ்வதற்கு இடையூறு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்