பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2023-07-06 20:22 GMT

பேட்டை:

நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் கணேசன் (வயது 22). ஐ.டி.ஐ. படித்த இவர் பேட்டை அருகே வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பிள்ளபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சக்திவேல் மகள் பிரியா (20). கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த 4 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்துக்கு பிரியா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியேறி, காதலன் கணேசனின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் குறுக்குத்துறை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு, பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி, இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் மேஜர் என்பதால் காதலனுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்