லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-21 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் பஸ் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலைக்கிராமம் வலசை காடு பகுதியில் வசிப்பவர் கருணாநிதி (வயது 60). இவர் சாலைக்கிராமம் பஸ் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார்.

இவரை சாலைக்கிராமம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து அவரிடம் இருந்து செல்போன், ரூ.1000 பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்