லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யகப்பட்டார்
திருப்புவனத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நரிக்குடிரோடு விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்த குருசாமி (வயது 60) எனவும் அவரிடம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 55 தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ.1400-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.