நெகமம்
நெகமத்தை அடுத்த செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது 67). இவர் வடசித்தூர் நால் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்த அய்யாசாமியை கைது செய்து, அவரிடம் இருந்து 25 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.