லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கூடலூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-26 18:45 GMT

கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் மெயின் பஜார் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஜாரில் நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கூடலூர் எம்.ஜி.ஆர். காலணியை சேர்ந்த காசிமாயன் (வயது 50) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 440 மதிப்புள்ள 336 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்