லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள பெரியகுத்தகையில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய குத்தகை பாலம் அருகே அதே பகுதியை சேர்ந்த முகமதுயூசுப்(வயது40) வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. அவரை போலீசாா் கைது செய்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.