பொள்ளாச்சி
பொள்ளாச்சி அன்சாரி வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த மேகராஜ் (வயது 56) என்பவர், செல்போனில் லாட்டரி சீட்டுக்களின் எண்ணை குறுந்தகவலாக அனுப்பி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொபட், செல்போன், ரூ.3 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.