லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நெல்லையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-03 19:49 GMT

நெல்லை மாநகரில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.அதன்படி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாட்ஸ்-அப் குழு அமைத்து அதன்மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்று வந்த தாழையூத்து நாரணம்மாள்புரம் செல்வம் நகரை சோந்த பைனான்சியர் பூல்பாண்டி (35) என்பவரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்தியதாக அவரிடம் இருந்து கார், செல்போன் மற்றும் ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்