பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் டி.கோட்டாம்பட்டி வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2,150 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.