லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-16 19:00 GMT

பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர் வளைவு அருகே ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த ஜெய்சங்கரை (வயது 52) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜெய்சங்கர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்