லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் பஸ் நிலைய பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கழிவறை அருகே லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த தாந்தோணி மலையை சேர்ந்த சுரேஷ் பாபு (வயது 55) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர்.