கடலூர்
கடலூர் புதுநகர் போலீசார் நேற்று காலை மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 58) என்பதும், லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.