லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
கம்பத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம் சிலுவை கோவில் பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு கம்பம் சர்ச் தெருவை சேர்ந்த அப்பாஸ் மந்திரி (வயது 48) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 564 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.