லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் அருகே சிறுவந்தாடு பகுதியில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மந்தக்கரை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.