கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் தலைமையிலான போலீசார் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரவேனு தவிட்டுமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அப்துல் விஜயகுமார் (வயது 55) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.