நாகர்கோவிலில் ரகசிய அறை அமைத்து லாட்டரி விற்பனை - 6 பெண்கள் உள்பட 7 பேர் கைது

ரகசிய அறை அமைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2023-07-19 15:18 GMT

குமரி,

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 ஆயிரம் ரூபாய் பணம், விற்பனைக்காக வைத்திருந்த 276 லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் எப்படி லாட்டரி விற்பனை நடைபெற்றது என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாட்டரி சீட்டு விற்ற பெண்களுக்கு மாத சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதும், ரகசிய அறை அமைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் அங்கு வாடிக்கையாளர்கள் லாட்டரி வாங்க வரலாமா, வேண்டாமா என்பதை தெரிவிக்க, அறையின் முன்பு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு விளக்குகளை பொருத்தி சிக்னல் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்