லாரி திருடியவர் பிடிபட்டார்
தூத்துக்குடியில் லாரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவருடைய மகன் பாஸ்கர் (வயது 48). இவர் மடத்தூர் பகுதியில் லாரி புக்கிங் ஆபீஸ் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது லாரியை தனது புக்கிங் ஆபீஸ் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். அந்த லாரியை யாரோ மர்மநபர் திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அனைத்து சுங்கச்சாவடி மற்றும் சோதனைச்சாவடிகளை உஷார்படுத்தினர். அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருடப்பட்ட லாரி எட்டயபுரம் அருகே சென்று கொண்டு இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த லாரியை பாஸ்கரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த கடையநல்லூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த சுகந்திரம் மகன் கணேசன் (42) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடு்தது போலீசார் கணேசனை கைது செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, கணேசனிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தார்.