செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
மானூர் அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மானூர்:
மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் மற்றும் போலீசார் ரஸ்தா-சீதபற்பநல்லூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 3 யூனிட் செம்மண் அனுமதிசீட்டு இன்றி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரான தாழையூத்தைச் சேர்ந்த அந்தோணி (வயது 57) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரி உரிமையாளர் மகாராஜன் (50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.