தேன்கனிக்கோட்டை அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Update: 2022-09-29 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி, துணை தாசில்தார் சுரேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை அஞ்செட்டி சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் அதிகாரிகள் அந்த லாரிகளை மறித்தனர். அப்போது டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது லாரிகளில் கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் 2 லாரிகளும் தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 லாரிகளையும், அவற்றில் கடத்தி வரப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்