ஆனைமலை
ஆனைமலைைய அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் வருவாய் ஆய்வாளர் சபரிஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் அசோக் குமார், உதவியாளர் காளிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குறுஞ்சேரி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து முறையான அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் பாறாங்கற்களை லாரியில் ஏற்றிச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் பணிக்கு ஒப்பந்ததாரர் மூலம் ெகாண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் லாரியை பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.