நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே ஜாகிரி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனால் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தபோது நொரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முண்டாசுபுறவடையை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது 30), லாரி உரிமையாளர் சந்தோஷ்(30) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.