விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரியை நிறுத்தியபோது அதன் டிரைவர், லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 4 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கூழாங்கற்களுடன் கூடிய அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து உதவி புவியியலாளர் சுப்பிரமணியன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.