லாரி மோதி விடுதி ஊழியர் பலி

பேராவூரணி அருகே லாரி மோதி விடுதி ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2023-03-28 21:07 GMT

ேராவூரணி;

பேராவூரணி அருகே லாரி மோதி விடுதி ஊழியர் உயிரிழந்தார்.

விடுதி ஊழியர்

பேராவூரணி அருகே தென்னங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதாசன்( வயது40). இவர் பேராவூரணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சித்தாதிக்காட்டில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு அண்ணதாசன் நடந்து சென்று கெண்டிருந்தார். அப்போது அறந்தாங்கி சாலையிலிருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு நெல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு மதுபான கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த அண்ணாதாசன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அண்ணதாசன் உயிரிழந்தார்.

டிரைவர் தப்பி ஓட்டம்

உடனே லாரியை சம்பவ இடத்திலேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அண்ணதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்