மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சாவு

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சாவு சாலையின் குறுக்கே நாய் வந்ததால் விபத்து

Update: 2023-05-24 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன்(வயது 27). டேங்கர் லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சியிலிருந்து புதுப்பாலப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அரசம்பட்டு வளைவில் வந்தபோது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. இதனால் நாய் மீதுமோதாமல் இருக்க பிரேக் பிடித்த ஜெயராமன் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி நதியா(22) கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமானுல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்