லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-15 18:47 GMT


விருதுநகர் அருகே உள்ள சங்கு ரெட்டியபட்டியை சேர்ந்தவர் அருண் மாரீஸ்வரன்(வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா(27), தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அருண் மாரீஸ்வரனின் மதுப்பழக்கத்தை சித்ரா கண்டித்து வந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய அருண் மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்