போடி புதூர் வலசத்துறை ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). லாரி டிரைவர். இவர், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.