மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவர் கைது

குத்தாலம் அருகே இரும்பு கம்பியால் மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல அகலங்கண் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய சசி(வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா(28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரம்யாவிற்கும், ஆரோக்கிய சசிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

வழக்கம்போல நேற்று மாலையும் அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய சசி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரம்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய சசியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்