மொபட் மீது லாரி மோதி விவசாயி சாவு

Update: 2023-10-05 19:00 GMT

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி கஸ்பா குழிவளவு பகுதியை சேர்ந்தவர் பங்காரு (வயது 77). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் சென்று கொண்டிருந்தார். அப்போது சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பங்காரு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்