தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆசிரியர் படுகாயம்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-13 20:36 GMT

தக்கலை, 

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.

ஆசிரியர் படுகாயம்

திருவனந்தபுரம் வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருடைய மகன் ஆதர்ஷ் (வயது 25), உத்தரபிரதேசத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் சம்பவத்தன்று நண்பரை பார்ப்பதற்காக நாகர்கோவில் வந்தார். பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வெள்ளிக்கோடு அருகில் சென்றடைந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் ஆதர்ஷ் படுகாயமடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுதொடர்பாக முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜன் (43) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்