லாரிகள் சிறைபிடிப்பு

கடையத்தில் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

Update: 2023-04-06 18:45 GMT

கடையம்:

கடையம் வழியாக கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக குண்டு கற்கள், ஜல்லி ஏற்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும்போது ஜல்லிக்கற்கள் கீழே கொட்டுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று மெயின் பஜார் முழுவதும் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி கிடந்தன. அதனை கடையத்தை சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமான ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, மூடாமல் சாலையில் வந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அந்த லாரிகளை சிறை பிடித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவர் ரவி அருணன், சங்க ஒன்றிய தலைவர் பூமிநாத் மற்றும் இளைஞர்கள் கடையம் யூனியன் முன்பு லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கனரக லாரிகளை அருகில் உள்ள எடைமேடைக்கு அழைத்துச் சென்று அபராதம் விதித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்