லாரி கவிழ்ந்து விபத்து
சென்னையிலிருந்து ஒரு லாரி மேற்கூரை சீட்டுகளை தயாரிக்கும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை கூடலூரை சேர்ந்த மாதேஸ் (வயது32) என்பவர் ஓட்டி வந்தார். லாரி அவினாசியை அடுத்து பழங்கரை ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது எந்திரத்தை கட்டி வைத்திருந்த கட்டு அவிழ்ந்ததால் எந்திரத்தின் பாரம் ஒருபுறமாக சாய்ந்ததில் லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி கவிழ்ந்ததில் ரோட்டின் மைய தடுப்பு சுவர் சேதமடைந்தது. கோவை மெயின்ரோட்டில் நடந்த இந்த விபத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.