சாலையில் கவிழ்ந்த லாரி
திருப்பூரில் இருந்து கரூரை நோக்கி நேற்று காலை பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று ஓலப்பாளையம் அடுத்த வெள்ளமடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் முன் சக்கரம் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. உடனே அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.இந்த விபத்தில் டிரைவர்,கிளீனர் காயமின்றி தப்பினர்.