தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,888 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,888 வழக்குகளுக்கு சமரச தீர்வு

Update: 2022-11-12 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1888 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் பங்கேற்று சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர்.

1,888 வழக்குகளுக்கு சமரச தீர்வு

நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதேபோல் வங்கி வாரா கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்பட சமரச தீர்வு காணக்கூடிய 4430 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

விசாரணையின் முடிவில் மொத்தம் 1,888 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.14 கோடியே 87 லட்சத்து 12 ஆயிரத்து 450-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்