2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வாழப்பாடியில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கூலித்தொழிலாளி 2 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.51 ஆயிரம் மற்றும் 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
வாழப்பாடி:-
வாழப்பாடியில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கூலித்தொழிலாளி 2 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.51 ஆயிரம் மற்றும் 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
தொழிலாளி
வாழப்பாடியில் போலீஸ் நிலையம் பின்புறம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தரைத்தள வீட்டுப்பகுதியை பூட்டிவிட்டு, மேல் தளத்தில் குடும்பத்தோடு தூங்கி உள்ளார்.
நேற்று அதிகாலை கீழ் தளத்திற்கு வந்து பார்த்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த ரூ.41 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
மற்றொரு வீட்டில் திருட்டு
வாழப்பாடி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடும்பத்தோடு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
அவர் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ேள சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வாழப்பாடி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.