அபராதத்தொகை கட்ட காலதாமதம் செய்த 2 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பூட்டு

திருவண்ணாமலையில் அபராதத்தொகை கட்ட காலதாமதம் செய்த 2 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

Update: 2022-06-09 18:13 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அபராதத்தொகை கட்ட காலதாமதம் செய்த 2 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

அபராதம்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2014-ம் ஆண்டு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த நல்லெண்ணெய் தரம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது,

அப்போது அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்தக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது உப்பு தரம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராத தொகையை கட்ட கோரி கடந்த ஒரு ஆண்டுகளாக உணவு பாதுகாப்பு துறை மூலம் தொடர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் சென்னையில் உள்ள தலைமை உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு அந்த சூப்பர் மார்க்கெட் மூலம் அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் அங்கு அபராதத்தொகையை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதேபோல் மற்றொரு சூப்பர் மார்க்கெட்டிலும் தரமற்ற ஜவ்வரிசி மற்றும் கற்கண்டு வைத்திருந்ததால் அதற்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

பூட்டு ேபாட்டனர்

இந்த சூப்பர் மார்க்கெட்டும் அபராதத்தொகையை செலுத்த காலதாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கையராஜா மற்றும் கலேஸ்குமார் ஆகியோர் அந்த 2 சூப்பர் மார்க்கெட்டிற்கும் சென்று உடனடியாக அவர்களை அபராதத்தொகையை செலுத்த உத்தரவிட்டனர்.

அவர்கள் அபராதத்தொகையை செலுத்தாததால் மாவட்ட நியமன அலுவலர் சூப்பர் மார்க்கெட்டின் உணவு பாதுகாப்பு விற்பனை சான்றிதழை ரத்து செய்து 2 சூப்பர் மார்க்கெட்டிற்கும் பூட்டு போட்டனர்.

அபராதத் தொகை செலுத்திய பின்பு விடுவிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு விற்பனை சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் திருவண்ணாமலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்