4 கிராம கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு

4 கிராம கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-06 18:42 GMT

பெரம்பலூர் அருகே நாவலூரில் மாரியம்மன் கோவில் உள்பட 3 கிராம கோவில்களில் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் திருடி செல்லப்பட்டது. இதேபோல திருப்பெயர் கிராமத்திலும் கிராமக் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் திருடி செல்லப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு நாவலூர் மற்றும் திருப்பெயர் கிராம மக்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்குசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பறியும் மோப்பநாயும், கைவிரல்ரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த கிராம கோவில்களுக்கு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் ஏதேனும் தடயங்களை விட்டு சென்றார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்