ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை-கலெக்டர் தகவல்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-27 20:37 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18-ம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 19-ந் தேதி ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்