ராமநாதபுரம் மாவட்டத்தில்13-ந் தேதி உள்ளூர்விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 13-ந் தேதி உள்ளூர்விடுமுறை அளிக்கப்படுகிறது.

Update: 2023-05-31 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் அமைந்துள்ளது சுல்தான் செய்யது இபுராகிம் சகீது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவில் வருகிற 12-ந் தேதி மாலை முதல் மறுநாள் 13-ந்தேதி அதிகாலை வரை சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 24-ந் தேதி(சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 24-ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை தினத்தன்று மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்