மாயூரம் கூட்டுறவு நகர வங்கியில் கடன் மேளா
மாயூரம் கூட்டுறவு நகர வங்கியில் கடன் மேளா நடந்தது.
மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு நகர வங்கி தலைமையகத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன் மேளா நடந்தது. நிகழ்ச்சிக்கு சரக துணை பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் நாகராஜன் வரவேற்றார். திட்ட விவரங்கள் குறித்து வங்கியின் பொது மேலாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடன் மேளா பற்றிய விவரங்களை கேட்டறிந்து விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கணேஷ்பிரபு, உமாசங்கர், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.