சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது
காரைக்குடி
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி சார்பில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சாந்திசிவசங்கர் தலைமை தாங்கி இந்தியன் வங்கி மூலம் 30 சாலையோர கடை வியாபாரிகளுக்கு கடன் வழங்கினார். இந்தியன் வங்கி மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சாலையோர கடை வியாபாரிகள், வங்கி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.