மகளிர் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் கடன் உதவி

திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-07-28 18:23 GMT

திருப்பத்தூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி கச்சேரி தெருவில் உள்ள வங்கியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் ஏ.திருப்பதி தலைமை தாங்கினார். மேலாளர் டி.ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வங்கி தலைவர் டி.டி.குமார் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜி.ரங்கநாதன், இயக்குனர்கள் குமார், அப்துல்வக்கீல், மகளிர் சுய உதவி குழுவினர், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பின்னர் தலைவர் டி.டி.குமார் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கி முதன்மையாக திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் நகர கூட்டுவங்கி மூலம் ரூ.50 கோடி அளவில் கடன் உதவி வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்